‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 March 2022 12:30 AM IST (Updated: 1 March 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார்பெட்டி செய்தி எதிரொலி:
நடைபாதை அமைக்கப்பட்டது

திருவாரூர் தாசில்தார் அலுவலகத்துக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு வர திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மேம்பாலம் பஸ் நிறுத்தம் வழியாக செல்லும் சாலையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக மணல் கொட்டப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-பொதுமக்கள், திருவாரூர்.

Next Story