ராட்சத அலையில் சிக்கி சிறுவன் பலி


ராட்சத அலையில் சிக்கி சிறுவன் பலி
x
தினத்தந்தி 1 March 2022 11:27 PM IST (Updated: 1 March 2022 11:27 PM IST)
t-max-icont-min-icon

நாகூரில், கடலில் குளித்தபோதுராட்சத அலையில் சிக்கி சிறுவன் பலியானான். அவனை காப்பாற்ற முயன்ற தந்தையும் இறந்தார்.

நாகூர்:
நாகூரில், கடலில் குளித்தபோதுராட்சத அலையில் சிக்கி சிறுவன் பலியானான். அவனை காப்பாற்ற முயன்ற தந்தையும் இறந்தார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நாகூர் தர்காவுக்கு வந்தனர்
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிவாஜி நகரை சேர்ந்தவர் ஷபீர் அகமது (வயது 45). இவர் தனது குடும்பத்தினருடன் நாகை மாவட்டம் நாகூர் தர்காவிற்கு நேற்று முன்தினம் வந்தார்.
தர்காவில் பிரார்த்தனை செய்து விட்டு நேற்று காலை சில்லடி கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்றார். 
ராட்சத அலையில் சிக்கிய சிறுவன் 
அங்கு ஷபீர் அகமது மகன் முகமது அயான்(வயது 15) மற்றும் உறவினர்கள் கடலில் குளித்தனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கி முகமது அயான் கடலில் மூழ்கினான்.  
மகனின் அலறல் சத்தம் கேட்டு கடற்கரையில் நின்று கொண்டிருந்த ஷபீர் அகமது ஓடிச்சென்று அலையில் சிக்கி கடலில் மூழ்கிய தனது மகனை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் கடலில் மூழ்கினார்.
 தந்தை-மகன் பரிதாப சாவு
இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கடலில் இறங்கி தேடினர். சிறிது நேரத்திற்கு பிறகு தந்தை-மகன் இருவரையும் மீட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் உயிரிழந்தது தெரிய வந்தது

Next Story