‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 March 2022 11:28 PM IST (Updated: 1 March 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்றவாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மாவட்டம் ,தொட்டியம் -நாமக்கல் மெயின் சாலை வாணப்பட்டறை முதல் வளையல் காரத் தெரு வரை சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில நேரம் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து காயமடையும் சம்பவமும் நடந்து வருகிறது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பொதுமக்கள், தொட்டியம், திருச்சி.
சேதமடைந்த சாக்கடை கால்வாய் மூடி 
திருச்சி மாநகராட்சி  14-வது வார்டு, பாபு ரோடு திப்பிரான் தொட்டி தெரு எதிர் சந்தில், கள்ளத் தெரு, அல்லிமால் தெரு விற்கு செல்லும் சாலையின் நடுவில் , மிகவும் பழுதடைந்த நிலையில்  சாக்கடை கால்வாய் மேல்மூடி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கின்ற  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் நடைபெறுவதற்கு முன்பு சேதமடைந்த சாக்கடை கால்வாய் மூடியை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சுவாமிநாதன், திருச்சி.
தெருநாய்களை பிடிக்க வேண்டுகோள் 
திருச்சி மாவட்டம், பீமநகர் சுற்று வட்டார பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் கடிக்க பாய்கின்றன. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே பீமநகர் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஆபேல் குணசீலன், காஜாபேட்டை, திருச்சி.

Next Story