சிறுத்தை நடமாட்டமா? வைரலாக பரவும் வீடியோவால் பரபரப்பு


சிறுத்தை நடமாட்டமா? வைரலாக பரவும் வீடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 March 2022 11:52 PM IST (Updated: 1 March 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே சிறுத்தை நடமாடுவதாக வீடியோ காட்சிகள் வைரலாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி அருகே சிறுத்தை நடமாடுவதாக வீடியோ காட்சிகள் வைரலாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கொண்டகிந்தனபள்ளி ஊராட்சி சேர்ந்த வண்டிகாரவட்டத்தில் உள்ள மைக்கண்ணன் குட்டை என்கிற மஞ்சாகுட்டையில் 2 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றுள்ளது. சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவம் ஆடுகளை சிறுத்தை அடித்துக் கொன்று இருக்கலாம் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பீதி எழுந்துள்ளது. 

மேலும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் பாறை மேல் இருப்பது போல் சமூக வலைத் தலங்களில் வைரலாக வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தால் காட்டுக்குள் விரட்டி அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Next Story