700 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டெடுப்பு
திருப்பத்தூர் அருகே 700 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே 700 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டது.
நடுகற்கள்
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஆ.பிரபு மற்றும் ஆய்வு மாணவர்களான சரவணன், சந்தோஷ், ஸ்ரீமன் ஆகியோர் திருப்பத்தூர் அருகே உள்ள ஜவ்வாதுமலை அடிவாரத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்,
அப்போது இப்பகுதில் உள்ள குரும்பேரியில் “பெரியவர்கள் கோவில்” என்ற இடத்தில் 4 நடுகற்கள் இருந்தது. அவற்றில் 3 சிற்பங்கள் கோவிலின் உள்ளேயும், ஒரு சிற்பம் கோவிலுக்கு வெளியே 100 மீட்டர் தொலைவில் பழமையான எட்டிமரத்தின் அடியிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிரபு கூறியதாவது:-
உடன்கட்டை
இந்த நடுகற்கள் வீரர்களது வலது கரத்தில் போர் வாளையும், இடது கரத்தில் வில்லினையும் ஏந்திய நிலையில் இருந்தது. முதுகில் அம்புகள் நிறைந்த கூடு காணப்படுகின்றது. காதுகளில் குண்டலமும், கழுத்தில் ஆபரணங்களும் இடுப்பில் குறுவாளும் காணப்படுகிறது. வீரர்கள் இறந்தவுடன் அவரவர் மனைவிகள் உடன்கட்டை ஏறியதைக் குறிப்பதற்காக வீரர்கள் உடன் அதற்குக் கீழே அவர்களது மனைவியரின் உருவமும் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
14-ம் நூற்றாண்டு
சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ள அமைப்பினையும் வீரர்கள் அணிந்துள்ள ஆபரணங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்நடுகற்கள் விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்காலமான 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்ககூடும் என்றும், இந்த நடுகற்கள் 700 ஆண்டுகள் பழமையானவை என்றும் வரலாற்றியல் ஆய்வாளரும் சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியருமான இரா.சேகர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story