டிராக்டர் டிரைவர் குடும்பத்திற்கு ரூ.4½ லட்சம் இழப்பீடு வழங்காததை கண்டித்து உறவினர்கள் தர்ணா


டிராக்டர் டிரைவர் குடும்பத்திற்கு ரூ.4½ லட்சம் இழப்பீடு வழங்காததை கண்டித்து உறவினர்கள் தர்ணா
x
தினத்தந்தி 2 March 2022 12:07 AM IST (Updated: 2 March 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

விஷவாயு தாக்கி இறந்த டிராக்டர் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.4½ லட்சம் வழங்காததால் உறவினர்கள் தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி

விஷவாயு தாக்கி இறந்த டிராக்டர் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.4½ லட்சம் வழங்காததால் உறவினர்கள் தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடியை அடுத்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவரிடம் டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அப்போது கடந்த 2005 ஆம் ஆண்டு குடிநீர் எடுக்கும் கிணற்றில் உள்ள மின்மோட்டர் பழுதாகிய நிலையில் மணிவண்ணன் மற்றும் மற்றொரு தொழிலாளி முருகன் ஆகியோர் அதை சரிசெய்ய கிணற்றில் இறங்கினர். அப்போது விஷவாயு தாக்கியதில் இருவரும் இறந்துவிட்டனர்.
இதுகுறித்து மணிவண்ணனின் குடும்பத்தினர் வேலூர் பணியாளர் இழப்பீடு ஆணையர் மன்றத்தில் முறையிட்டனர். 

இதில் மணிவண்ணின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தரூ.4.52 லட்சத்தை வட்டியுடன் திருப்பதியிடம் வசூலித்து வழங்க வேண்டும் என்று = தீர்ப்பளிகப்பட்டது.
ஆணையம் உத்தரவிட்டு 11 மாத காலம் ஆகியும் இதுவரையில் அதிகாரிகள் இழப்பீடு பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி வாணியம்பாடி தாலுகாஅலுவலகத்தில் மணிவண்ணனின் தாய் மலர் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர காவல் நிலைய போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story