போர் காரணமாக மனதளவில் அச்சத்தில் தவித்தோம்; உக்ரைனில் இருந்து ஆரணி திரும்பிய மாணவி பேட்டி
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் மனதளவில் அச்சத்தில் தவித்ததாக நாடு திரும்பிய ஆரணி மாணவி கூறினார்.
ஆரணி
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் மனதளவில் அச்சத்தில் தவித்ததாக நாடு திரும்பிய ஆரணி மாணவி கூறினார்.
ஆரணி மாணவி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நெசவு தொழிலாளி தயாளன். இவரது மகள் தீபலட்சுமி, உக்ரைன் நாட்டில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார்.
தற்போது உக்ரைன் மீது ரஷியா போர் நடத்தி வருவதால் தமிழக மாணவ- மாணவிகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அவர்கள் மத்திய அரசால் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
தமிழக மாணவர்களும் மீட்கப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர். உக்ரைனில் சிக்கித்தவித்த ஆரணியை சேர்ந்த மாணவி தீபலட்சுமியும் உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார்.
தமிழகம் திரும்பிய மாணவ- மாணவிகளை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அச்சத்தில் தவித்தோம்
அதைத்தொடர்ந்து மாணவி தீபலட்சுமி சொந்த ஊரான ஆரணி எஸ்.வி.நகரத்துக்கு வந்தார்.
இதுகுறித்து மாணவி தீபலட்சுமி கூறுகையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்ததால் நாங்கள் உணவின்றி தவித்தோம். மனதளவில் அச்சத்தில் தவித்தோம்.
வெளியுறவு அமைச்சகம் மூலம் எங்களை மீட்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த தமிழக அரசுக்கும், தமிழக முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story