கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பனவடலிசத்திரம்:
பாவூர்சத்திரம் அடுத்துள்ள திப்பணம்பட்டி அருகே உள்ள மீனாட்சிபுரம் வேத கோவில் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 58). கிணறு வெட்டும் தொழிலாளியான இவர் மேலநீலிதநல்லூரில் தனியாருக்கு சொந்தமான கிணற்றுக்கு சென்றார். அப்போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பனவடலிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினரும் வந்து மனோகரன் உடலை வெளியே எடுத்தனர்.
பின்னர் அவரது உடலை பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story