சதுரகிரியில் மகா சிவராத்திரி விழா


சதுரகிரியில் மகா சிவராத்திரி விழா
x
தினத்தந்தி 2 March 2022 1:07 AM IST (Updated: 2 March 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

மகா சிவராத்திரி விழாவையொட்டி சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வத்திராயிருப்பு, 
மகா சிவராத்திரி விழாவையொட்டி சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுந்தரமகாலிங்கம் கோவில்
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இ்்ந்த கோவிலுக்கு நேற்று மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிய தொடங்கினர். 
காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு மலைப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நேற்று மகா சிவராத்திரி என்பதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு நேற்று பகலில் நான்கு கால பூஜைகளும், இரவில் நான்கு கால பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் காட்சி 
சிவராத்திரியையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, பக்தி கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
 பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். மதுரை மாவட்டம் சாப்டூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு போலீசாரும், வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story