பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 March 2022 1:13 AM IST (Updated: 2 March 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே நன்றாக படிக்குமாறு தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே நன்றாக படிக்குமாறு தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-2 மாணவி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா சொக்கம்பட்டி அருகே போகநல்லூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் செல்லச்சாமி. இவருடைய மனைவி சண்முகத்தாய். இவர் தென்காசியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர்களுடைய மகள் பெனியாராஜ் (வயது 17). இவர் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தவில்லை எனவும், இதனால் நன்றாக படிக்குமாறு தாய் சண்முகத்தாய்     கண்டித்ததாகவும்    கூறப்படு கிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மனமுடைந்த பெனியாராஜ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் மேற்கூரையில் மின்விசிறி மாட்ட பயன்படும் இரும்பு கம்பியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story