மாநில சிலம்ப போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் வெற்றி
மாநில சிலம்ப போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர்
திருச்செந்தூர்:
கன்னியாகுமரியில் 13-வது மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் விலங்கியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் எம்.பூமுத்தையா முதலிடமும், வணிக நிர்வாகவியல் துறை 2-ம் ஆண்டு மாணவர் ஜெ.நவீன் 2-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், செயலர் ஜெயக்குமார், சிலம்ப பயிற்சியாளர் ஸ்டீபன், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோரும், விலங்கியல் துறை தலைவர் சுந்தரவடிவேல், வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அந்தோணி சகாய சி்த்ரா, அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story