வெம்பக்கோட்டை பகுதியில் சிவராத்திரி திருவிழா
வெம்பக்கோட்டை பகுதியில் சிவராத்திரி திருவிழா நடைபெற்றது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக தொடங்கியது. ஏழாயிரம் பண்ணையில் உள்ள சீர்காட்சி பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பழைய ஏழாயிரம் பண்ணையில் உள்ள எமராஜா கோவில், சிப்பிபாறையில் உள்ள ராமபுலி அய்யனார்கோவில், வெம்பக்கோட்டை கொத்தள முத்து சுவாமி கோவில், துலுக்கன்குறிச்சியில் வாழிஞ்சி அய்யனார் கோவில், விஜயகரிசல்குளம் நிறை பாண்டியன்அய்யனார் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தாயில்பட்டி ஊராட்சி கோட்டையூரில் மொட்டைய சுவாமி கோவிலில் கருப்பசாமி, அய்யனார், வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
Related Tags :
Next Story