தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்


தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த  17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
x
தினத்தந்தி 2 March 2022 2:02 AM IST (Updated: 2 March 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

தூத்துக்குடி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
பிறந்தநாள் விழா
தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் உற்சாகமாக விழா கொண்டாடினர். ஆங்காங்கே ஒலி பெருக்கி மூலம் கட்சி கொள்கை விளக்க பாடல்களை ஒலிபரப்பினர். பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.
 தூத்துக்குடியில் வார்டுகள் தோறும் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவும் வழங்கப்பட்டது.
தங்க மோதிரம்
தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி மாலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி 8 ஆண் குழந்தைகள், 9 பெண் குழந்தைகள் ஆக மொத்தம் 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு, துணை முதல்வர் கலைவாணி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் டாக்டர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story