அரசு பஸ் மீது லாரி மோதல்; பயணிகள் உள்பட 20 பேர் காயம்


அரசு பஸ் மீது லாரி மோதல்; பயணிகள் உள்பட 20 பேர் காயம்
x
தினத்தந்தி 2 March 2022 2:19 AM IST (Updated: 2 March 2022 2:19 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் மீது லாரி மோதியதில் பயணிகள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.

வி.கைகாட்டி:

பஸ் மீது லாரி மோதல்
அரியலூரில் இருந்து வி.கைகாட்டி வழியாக கோட்டியால் கிராமத்துக்கு அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் சென்று கொண்டிருந்தது. பஸ்சை அணிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த டிரைவர் கொளஞ்சியப்பன்(வயது 56) ஓட்டினார். கண்டக்டராக சாவடிக்காடு கிராமத்தை சேர்ந்த குமார்(50) பணியில் இருந்தார். வி.கைகாட்டி அருகே உள்ள கா.கைகாட்டி பகுதியில் சென்றபோது, எதிரே சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது.
20 பேர் காயம்
மேலும் பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் அயன்சுத்தமல்லியை சேர்ந்த பாத்திமாமேரி (47), ஆஞ்சலாமேரி (50), சுத்தமல்லியை சேர்ந்த கண்மணி (40), கல்லூரி மாணவிகளான சுத்தமல்லியை சேர்ந்த காவியா (18), கோரைக்குழியை சேர்ந்த அகல்யா (18), காரைக்காட்டான்குறிச்சியை சேர்ந்த சுவேதா (18), சேனாநல்லூரை சேர்ந்த முரளி மகன் பார்த்தசாரதி (7) உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த கயர்லாபாத் போலீசார் மற்றும் அக்கம், பக்கத்தில் இருந்த மக்கள் அங்கு வந்து பஸ்சில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கயர்லாபாத் போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story