ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
இரணியல் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திங்கள்சந்தை:
இரணியல் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாலிபர் பிணம்
இரணியல் அருகே கண்டன்விளையில் ரெயில்வே கிராசிங் உள்ளது. இதன் அருகே நேற்று அதிகாலையில் தண்டவாளத்தில் ஒரு வாலிபரின் பிணம் கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதியினர் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை பார்வையிட்டனர். முதலில் இறந்தவர் யார்? என்ற விவரம் தெரியாமல் இருந்தது. இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாயுடன் தகராறு
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் வில்லுக்குறி அருகே உள்ள மணக்கரை பகுதியை சேர்ந்த முருகன் மகன் ராஜு (வயது 29) என்பது தெரிய வந்தது. முருகன் ஏற்கனவே இறந்து விட்டார்.
ராஜு சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். மேலும் மது குடித்துவிட்டு வீட்டில் உள்ள தனது தாயாரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் தாயார் கடந்த சில நாட்களாக உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்புற்ற ராஜு, கண்டன்விளை ரெயில்வே கிராசிங் அருகே சென்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story