3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது
3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி
திருச்சி பாலக்கரை கீழபுதூரில் உள்ள டீக்கடை காசாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 பறித்த வழக்கில் விஜய்பாபு (24) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்தார்.
மண்ணச்சநல்லூரை சேர்ந்த ராஜமாணிக்கத்தின் மகன் சதீஷ்குமார்(32). கடந்த ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஷேக் அப்துல்லா(45), பிச்சைமுத்து, சதீஷ்குமாரின் தாய் அம்சவல்லி(63) உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் ஷேக்அப்துல்லா, பிச்சைமுத்து ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story