தர்காவின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு


தர்காவின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு
x
தினத்தந்தி 2 March 2022 3:05 AM IST (Updated: 2 March 2022 3:05 AM IST)
t-max-icont-min-icon

தர்காவின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு போயின

மலைக்கோட்டை
திருச்சி பெரியகடைவீதி சந்துகடை பகுதியில் ஹஜ்ரத் ஹீசேன்ஷா பண்டாரிஷா தர்கா உள்ளது. நேற்று அதிகாலை இந்த தர்காவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற 3 மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை திருடிச் சென்றனர். அதில், எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து தர்காவின் நிர்வாகிகள் கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டை குற்றப்பிரிவு போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது அந்த பகுதியில் நடமாடிய 3 மர்ம நபர்களின் உருவங்கள் பதிவாகி இருந்தன. அந்த நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story