2 வயது ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது
கடூா் அருகே தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த 2 வயது ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கி உள்ளது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிக்கமகளூரு: கடூா் அருகே தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த 2 வயது ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கி உள்ளது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் அட்டகாசம்
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பீரூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த வனப்பகுதியில் இருந்து, கடந்த ஒரு மாதமாக சிறுத்தை ஒன்று வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. அதாவது அந்த சிறுத்தை, ஆடு, மாடுகளை வேட்டையாடி வந்தது.
அந்தப்பகுதியில் சிறுத்தை நடமாடி வந்ததை பலர் பார்த்து உள்ளனர். இதனால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வந்தனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
சிறுத்தை சிக்கியது
இந்த நிலையில் மக்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த 4 நாட்களுக்கு முன்பு பீரூர் பகுதியில் வனத்துறையினர் கூண்டு ஒன்றை வைத்தனர். மேலும் கூண்டில் இரையாக ஆடு ஒன்றையும் கட்டி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை, கூண்டில் இருந்த இரையை சாப்பிட வந்தபோது, அந்த சிறுத்தை வசமாக கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது.
இதுபற்றி அறிந்ததும் அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்போில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர், கூண்டுடன் சிறுத்தையை லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.
மக்கள் மகிழ்ச்சி
பீரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கி உள்ளதால், மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது 2 வயது நிரம்பிய ஆண் சிறுத்தை ஆகும். இந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடப்படும் என்றார்.
Related Tags :
Next Story