இளம்பிள்ளை அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மாணவன் சாவு


இளம்பிள்ளை அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மாணவன் சாவு
x
தினத்தந்தி 2 March 2022 3:15 AM IST (Updated: 2 March 2022 3:15 AM IST)
t-max-icont-min-icon

இளம்பிள்ளை அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மாணவன் உயிரிழந்தான்.

இளம்பிள்ளை:
இளம்பிள்ளை அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மாணவன் உயிரிழந்தான்.
பள்ளி மாணவன்
இளம்பிள்ளை அருகே உள்ள நடுவனேரி கிராமம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் நவீன் (வயது 9), இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த நவீன் திடீரென காணாமல் போய்விட்டார். இது குறித்து அவரின் தந்தை மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். 
கழிவுநீர் தொட்டி
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் நவீனை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்களது வீட்டின் அருகே திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் தொட்டியில் நவீன் பிணமாக மிதந்தது தெரியவந்தது. இது குறித்து மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து நவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் கூறும் போது, மாணவன் நவீன், அந்த பகுதியில் ஓடிப்பிடித்து விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளான். இதில் கழிவுநீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து இருக்கலாம் என்றனர். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story