நண்பர்களின் செல்போன் மூலம் இளம்பெண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி தொல்லை; முன்னாள் காதலனிடம் போலீஸ் விசாரணை


நண்பர்களின் செல்போன் மூலம் இளம்பெண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி தொல்லை; முன்னாள் காதலனிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 2 March 2022 3:15 AM IST (Updated: 2 March 2022 3:15 AM IST)
t-max-icont-min-icon

தனது எண்ணை ‘பிளாக்’ செய்ததால் நண்பர்களின் செல்போன் மூலம் இளம்பெண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த முன்னாள் காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மங்களூரு: தனது எண்ணை ‘பிளாக்’ செய்ததால் நண்பர்களின் செல்போன் மூலம் இளம்பெண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த முன்னாள் காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்து வேறுபாடு

தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா கொக்கடா பகுதியை சோ்ந்தவர் 25 வயது வாலிபர். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் 2 பேரும் பிரிந்து விட்டனர். ஆனாலும் அந்த வாலிபர், இளம்பெண்ணுக்கு தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பி தொந்தரவு செய்துள்ளார். 

இதனால், அந்த இளம்பெண், வாலிபரின் செல்போன் எண்ணை ‘பிளாக்’ ெசய்துவிட்டார். இதன்காரணமாக அந்த இளம்பெண்ணுக்கு வாலிபரால் குறுந்தகவல் அனுப்ப முடியவில்லை. 

முன்னாள் காதலனிடம் விசாரணை

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், தனது நண்பர்கள் பலரிடம் செல்போனை பேசிவிட்டு தருவதாக வாங்கி, அவா்களின் நம்பரில் இருந்து இளம்பெண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இதனால் அந்த இளம்பெண், கடபா போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து கடபா போலீசார், இளம்பெண்ணுக்கு குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணை வைத்து 15 பேரை பிடித்து விசாரித்தனர். 

அப்போது தான், அவர்களின் செல்போன்கள் மூலம் காதல் தோல்வி அடைந்த வாலிபர் இளம்ெபண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியது தெரியவந்தது. 
அதாவது, தனது செல்போன் எண்ணை இளம்பெண் ‘பிளாக்’ செய்ததால் அந்த வாலிபர், தனது நண்பர்களின் செல்போன்களை இரவல் வாங்கி அதன்மூலம் இளம்பெண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், இளம்பெண்ணின் முன்னாள் காதலனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story