தின்பண்டம் வாங்க சென்றபோது குண்டுவீச்சில் நவீன் இறந்துள்ளார்


தின்பண்டம் வாங்க சென்றபோது குண்டுவீச்சில் நவீன் இறந்துள்ளார்
x
தினத்தந்தி 2 March 2022 3:28 AM IST (Updated: 2 March 2022 3:28 AM IST)
t-max-icont-min-icon

3 நாட்களாக பட்டினி கிடந்ததால், தின்பண்டம் வாங்க சென்றபோது குண்டுவீச்சில் நவீன் இறந்ததாக அவரது பெரியப்பா உஜ்ஜேகவுடா என்பவர் தெரிவித்துள்ளார்.

ஹாவேரி: 3 நாட்களாக பட்டினி கிடந்ததால், தின்பண்டம் வாங்க சென்றபோது குண்டுவீச்சில் நவீன் இறந்ததாக அவரது பெரியப்பா உஜ்ஜேகவுடா என்பவர் தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாணவர் பலி

ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகாவை சேர்ந்தவர் நவீன் (வயது 21). இவர் உக்ரைனில் 4-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். தற்போது உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால், அனைத்து மாணவர்களுடன் கல்லூரியில் இருந்து பதுங்கு குழியில் தங்கியிருந்தார்.

 இவருடன் மேலும் சில மாணவர்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்திய விமானத்தை பிடிப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வந்தார். 

இதற்கு போலந்து சென்றால்தான் தப்பிக்க முடியும் என்பதால், தான் தங்கியிருந்த பதுங்கு குழியில் இருந்து வெளியேறி போலந்துக்கு நடந்து சென்றார். கார்கிவில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் சென்றபோது, ரஷியாவின் குண்டுவீச்சு தாக்குதலில் சிக்கி நவீன் உயிரிழந்தார். இந்த தகவல் உறவினர் மகன் ஒருவர் மூலம் ஹாவேரியில் உள்ள பெற்றோருக்கு தெரியவந்தது. இது குறித்து நவீனின் பெரியப்பா உஜ்ஜேகவுடா கூறியதாவது:-

தின்பண்டம் வாங்க சென்றார்

போர் ஆரம்பித்த நாள் முதல் நவீன் தினமும் செல்போனில் வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் பேசி வந்தார். அப்போது சாப்பிடுவதற்கு சரியாக உணவு இல்லை. நீர் இல்லை. உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருந்து மாத்திரை கிடைப்பதே அரிது. 3 நாட்களாக பட்டினியாக இருப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். 

காலையில் தின்பண்டம் வாங்குவதற்காக நவீன் மட்டும் வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் பதுங்கு குழிக்கு திரும்பவில்லை என்றதும், உடன் இருந்த நண்பர்கள், நவீன் செல்போனை தொடர்பு கொண்டனர். ஆனால் போன் சுவிட்ச்-ஆப் ெசய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர் தான், ரஷிய படைகள் தாக்குதலில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. நவீன் இறந்ததை முதலில் நாங்கள் நம்பவில்லை. அதன்பின்னர் எங்களுக்கு நவீன் இறந்தது தெரியவந்தது. 4-ம் ஆண்டு படித்து வரும் அவர் இன்னும் ஒரு ஆண்டில் டாக்டராகி இருப்பார். அதற்குள் விதி அவரை எங்களிடம் இருந்து பிரித்துவிட்டது 
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். 

Next Story