பஞ்சப்பள்ளி அருகே விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானைகள்
பஞ்சப்பள்ளி அருகேவிவசாய நிலங்களில் புகுந்து யானைகள் பயிர்களை சேதப்படுத்தின.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே ஏரி பஞ்சப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10-க்கும் மேற்பட்ட யானைகள் ஊருக்குள் புகுந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் அந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து நெல், வாழை, தென்னை பயிர்களை மிதித்து சேதப்படுத்தின.
இது குறித்து மக்கள் பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து சென்று பட்டாசு வெடித்து யானைகளை தேன்கனிக்கோட்டை காப்புக்காட்டிற்கு விரட்டினர். யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story