அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் தி.மு.க.வில் சேர்ந்தார்


அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் தி.மு.க.வில் சேர்ந்தார்
x
தினத்தந்தி 2 March 2022 11:35 AM IST (Updated: 2 March 2022 11:35 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி மாநகராட்சியில் அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் தி.மு.க.வில் சேர்ந்தார்.

ஆவடி,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து கடந்த மாதம் 22-ந்தேதியன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. ஆவடி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணி 43 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடத்திலும், சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றனர். மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 25 இடங்களை தாண்டி வெற்றி பெற்றதால் கடந்த 4-ந்தேதி நடைபெறும் மேயர், துணை மேயர் பதவிகளை கைப்பற்ற தயாராகி விட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் 14-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேஷ்குமார் வாக்கு எண்ணிக்கை முடிந்த அன்றே பால்வளத்துறை அமைச்சர் நாசர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அதைத்தொடர்ந்து 16-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர் மீனாட்சி ஆதிகேசவன், அமைச்சர் நாசர் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரில் 2 பேர் தி.மு.க.வில் இணைந்ததால் ஆவடி மாநகராட்சி அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Next Story