10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 March 2022 11:39 AM IST (Updated: 2 March 2022 11:39 AM IST)
t-max-icont-min-icon

தண்டையார்பேட்டையில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பூர்,

தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா. மாட்டு வண்டி ஓட்டி வருகிறார். இவரது மகன் தினகரன் (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று தந்தை ராஜாவிற்கு சாப்பாடு கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்த தினகரன் அறைக்குள் சென்று கதவை மூடி உள்தாழ்ப்பாள் போட்டு கொண்டார். இதையடுத்து, வெகுநேரமாகியும் தினகரன் வெளிவராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே தினகரனை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தினகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவர் தற்கொலை தொடர்பாக தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story