செங்குன்றம் அருகே மகளிர் சுய உதவிக்குழு தலைவி வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு
செங்குன்றம் அருகே மகளிர் சுய உதவிக்குழு தலைவி வீட்டில் 17 பவுன் நகைகள் திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த விளாங்காடு பாக்கம் சிறுதாவூர் அம்பேத்கர் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் மேரி(வயது 60). இவர் அப்பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு செங்குன்றத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று விட்டு, மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர், உள்ளே சென்று பார்த்த போது மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து அதில் இருந்த 17 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரத்தை திருடிவிட்டு சென்றது தெரியவந்தது.
இது குறித்து மேரி செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை பதிவுகளை சேகரித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story