பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
சென்னை,
சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த வருடம் அக்டோபர் மாதம் பெய்த பலத்த மழைக்கு பூண்டி ஏரியின் நீர்மட்டம் ‘கிடுகிடு’ என்று உயர்ந்தது.
இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் 22-ந் தேதி பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு புழல் ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story