முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த மணவாளநகரை சேர்ந்தவர் செங்கதிர் செல்வன். இவரது மகன் விஜய் (வயது 24). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர் தனது நண்பர்களுடன் மணவாளநகர் கருணாநிதி தெருவில் வாடகைக்கு வசித்து வருகிறார். அவரது வீட்டின் கீழ்தளத்தில் சீனு (20) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் சீனு ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு விஜயின் வீட்டுக்கு நேற்று முன்தினம் கையில் கத்தியுடன் சென்றார்.
அப்போது அங்கிருந்த விஜயை தகாத வார்த்தைகள் பேசி தலையில் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த விஜயின் நண்பர்களையும் கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த விஜய் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனு என்ற நவீனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story