பொதுமக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 March 2022 4:35 PM IST (Updated: 2 March 2022 4:35 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் சாலை மறியல்

காங்கேயம் அருகே பள்ளி மாணவர்களை அரசு டவுன்பஸ்சில் ஏற்றாமல் சென்றதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
சாலை மறியல் 
காங்கேயம்  சென்னிமலை சாலை பகுதிகளை சேர்ந்த நெய்க்காரன்பாளையம், கல்லேரி, ஆலாம்பாடி, நால்ரோடு, சாவடி, திட்டுப்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து காங்கேயம் அரசு மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் நெய்க்காரன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு தினசரி காலையில் ஏராளமான  மாணவர்கள் அரசு பஸ் மூலம் வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை  காங்கேயம், சென்னிமலை சாலை, கல்லேரி பகுதி பஸ் நிறுத்தத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அரசு பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது 8.50 மணியளவில் வந்த அரசு பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணத்தினால்,  பள்ளி மாணவர்களை ஏற்றாமல்  சென்றதாக கூறப்பப்டுகிறது.
இதையடுத்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் போனதால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், பயணிகள், பொதுமக்கள் திடீரென அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லும் காலை 8 மணி மற்றும் 8.30 மணி ஆகிய நேரங்களில் கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காங்கேயம் போலீசார் போராட்டதில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுத்து, கூடுதல் பஸ்கள் இயக்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் வாகன போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story