பிரியாணி கடை உரிமையாளரை தாக்கிய 3 பேர் கைது


பிரியாணி கடை உரிமையாளரை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 March 2022 5:01 PM IST (Updated: 2 March 2022 5:01 PM IST)
t-max-icont-min-icon

பிரியாணி கடை உரிமையாளரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி, 

சென்னை அம்பத்தூர் புதூர் பிரதான சாலையை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 35). சிங்கப்பூரில் வேலை செய்த பிரேம்குமார் தனது மனைவியுடன் அதே பகுதியில் தற்போது பிரியாணி கடை நடத்தி வருகிறார். இங்கு கடந்த 27-ந் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (38) என்பவர் பிரியாணி மற்றும் சிக்கன் சாப்பிட்டுள்ளார். அதற்கான கட்டண தொகையான ரூ.230-ஐ கேட்டதற்கு இந்த கட்டிடத்தின் உரிமையாளர் எங்களது உறவினர், எங்களிடமே பணம் கேட்கிறாயா? என்று கூறி தம்பதியை மிரட்டி உள்ளார்.

 மேலும் தனது ஆதரவாளர்கள் 2 பேருடன் சேர்ந்து பிரேம்குமார் மற்றும் அவரது மனைவியை ராஜேஷ் தாக்கிவிட்டு கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில், அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், சுரேஷ் (40) மற்றும் கோகுல் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Next Story