வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை கொள்ளை


வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 2 March 2022 5:48 PM IST (Updated: 2 March 2022 5:48 PM IST)
t-max-icont-min-icon

வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் பெரியகுப்பம் கற்குழாய் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 55). அ.தி.மு.க. நிர்வாகி. இவர் கடந்த மாதம் 23-ந் தேதியன்று தனது வீட்டை பூட்டிவிட்டு பெங்களூருக்கு சென்றார். இதனால் வீட்டை மணவாளநகரில் உள்ள அவரது மகள் மாலினி கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலினி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 22 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுபற்றி இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story