ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் நீர் பாசனத்திற்கான பி.வி.சி. குழாய்கள் வாங்குதல் திட்டத்தில் பயன்பெறலாம்


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் நீர் பாசனத்திற்கான பி.வி.சி. குழாய்கள் வாங்குதல் திட்டத்தில் பயன்பெறலாம்
x
தினத்தந்தி 2 March 2022 5:51 PM IST (Updated: 2 March 2022 5:51 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம்,

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு் கழகத்தின் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நீர் பாசனத்திற்கான பி.வி.சி. குழாய்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் நீர்பாசனத்திற்கான பி.வி.சி. குழாய்கள் வாங்குதல் திட்டத்தில் பயன்பெற http://application.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் Pipe Line திட்டத்தில் புகைப்படம், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் (ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, சிட்டா, பட்டா, அடங்கல், அ பதிவேடு, புலப்பட வரைபடம் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பம் பதிவு செய்யலாம். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் 24 மணி நேரமும் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இணையதளத்தில் பதிவு செய்ய இயலாத நபர்கள் நேரடியாக தாட்கோ அலுவலகத்தை தொடர்புகொண்டு பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story