செங்கல்பட்டு மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 2 March 2022 5:55 PM IST (Updated: 2 March 2022 5:55 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வழியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த வகுப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்க உள்ளது. இந்த வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை நேரடியாக நடத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் எண் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை ஆகிய விவரங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளவேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

Next Story