கல்வி மாவட்ட சாரண, சாரணியருக்கான மாநில ஆளுநர் விருது தேர்வு முகாம்


கல்வி மாவட்ட சாரண, சாரணியருக்கான மாநில ஆளுநர் விருது தேர்வு முகாம்
x
தினத்தந்தி 2 March 2022 6:23 PM IST (Updated: 2 March 2022 6:23 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கல்வி மாவட்ட சாரண, சாரணியருக்கான மாநில ஆளுநர் விருது தேர்வு முகாம் நடைபெற்றது

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கல்வி மாவட்ட சாரண, சாரணியருக்கான மாநில ஆளுநர் விருது தேர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட கல்வி அதிகாரியும், மாவட்ட சாரண, சாரணிய அமைப்பின் முதன்மை ஆணையருமான மோகனன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜி.வைஸ்லின் ஜிஜி சிறப்புரையாற்றினார். சாரண, சாரணிய இயக்கத்தின் தலைவர் ரத்னகுமார் முன்னிலை வகித்தார். முகாமில் 13 பள்ளிகளில் இருந்து 87 சாரண, சாரணியர்கள் கலந்துகொண்டனர். சாரண, சாரணியர்களுக்கு கூடாரம் அமைத்தல், கயிற்றுக்கலை, திைச அறிதல், மதிப்பிடுதல், குறியிடல் ஆகியவற்றில் தேர்வு நடைபெற்றது. தேசிய தேர்வாளர்கள் நாராயணன் மற்றும் வெங்கட்டம்மாள் ஆகியோர் தேர்வுகளை நடத்தினர்.
முகாமில் பள்ளி துணை ஆய்வாளர் ஆனந்தகுமார், மாவட்ட ஆணையர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார், மாவட்ட சாரணியர் அமைப்பு ஆணையர் காந்திமதி, மாவட்ட சாரணர் அமைப்பு ஆணையர் பொன்ராஜ் கோயில்தாஸ், மாவட்ட சாரணர் பயிற்சி ஆணையர் பாலசுப்பிரமணியன், சாரணிய பயிற்சி ஆணையர் பேபி, மாவட்ட சாரண சாரணிய அமைப்பு பொருளாளர் சுகுமார் ஜெபத்துரை மற்றும் சாரண சாரணிய ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை மாவட்ட சாரண சாரணிய அமைப்பு செயலாளர் செல்வராஜ் செய்திருந்தாார்.

Next Story