நெல் மூட்டைகளை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்- நாகை கலெக்டர்
2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
நாகப்பட்டினம்:-
2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கனமழைக்கு வாய்ப்பு
நாகை மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்களும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை, மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு நாகை மாவட்ட விவசாயிகள், அறுவடைக்கு தயாராக உள்ள நெல்வயல்கள் மற்றும் பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்காத அளவிற்கு வடிகால் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
பாதுகாப்பான இடத்தில்...
அறுவடை செய்து உலர்த்தி காயவைக்கப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். மழைக்குப்பின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தங்கள் நெல்லை கொண்டு சென்று விற்பனை செய்யலாம். மேலும், மழையின் போது கால்நடைகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் மேற்கொண்டு மழையின் தாக்கத்தில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story