திருச்செந்தூர் புதிய உதவி கலெக்டர் பொறுப்பேற்பு
திருச்செந்தூரில் புதிய உதவி கலெக்டர் நேற்று(புதன்கிழமை) பொறுப்பேற்பேற்று கொண்டார்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் உதவி கலெக்டராக பணியாற்றிய கோகிலா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மதுரை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டராக பணியாற்றிய எஸ்.புஹாரி திருச்செந்தூர் உதவி கலெக்டராக பணியமர்த்தப்பட்டார். அவர் நேற்று திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டராக பொறுப்பு ஏற்று கொண்டார்.
அப்போது, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், ஏரல் தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டவேல், கிராம நிர்வாக அலுவலர் வைரமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story