வனத்துறையில் 30 சதவீத பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் வன அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


வனத்துறையில் 30 சதவீத பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் வன அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 2 March 2022 8:17 PM IST (Updated: 2 March 2022 8:17 PM IST)
t-max-icont-min-icon

வனத்துறையில் 30 சதவீத பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வனத்துறையில் 30 சதவீத பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க மாநில தலைவர் கே.சிவபிரகாசம் தலைமை தாங்கினார். மண்டல அமைப்பாளர்கள் வி.பிச்சை, டேவிட் ராஜா, முருகானந்தன், கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் எம்.பாபு, மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வனக்காப்பாளர், வனக்காவலர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். வனத்தை பாதுகாக்கும் வகையில் வனத்துறையில் 30 சதவீத பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு ஓய்வு அறையுடன் கூடிய அலுவலகம் அமைத்து கொடுக்க வேண்டும். வனத்துறை நிர்வாக திறனை மேம்படுத்த வனத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்த தலைமை பணியாளர் அலுவலர் பதவியை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திம்பம் மலைப்பாதை
சங்கத்தின் மாநில தலைவர் கே.சிவபிரகாசம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
வனவிலங்குகள், மனிதர்கள், வனத்தின் பாதுகாப்புக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வகுக்கப்பட்ட வனச்சட்டங்களை தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்ற வேண்டும். தற்காலிக பணியாளர்களாக பணி செய்யும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்படுவது அதிகாரிகளின் தவறான பரிந்துரையாகும். வனவிலங்குகள் இறப்பதை தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் போக்குவரத்துக்கு தடை விதித்தால், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். இதுதொடர்பாக வன அலுவலர்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். இதேபோல் திம்பம் மலைப்பாதையை பயன்படுத்தும் மக்களிடமும் கருத்து கேட்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில பொருளாளர் பிரபு, துணைத்தலைவர் மகேஷ், தலைமை நிலைய செயலாளர் கிளவுமெண்ட் எடிசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாநில இணைச்செயலாளர் ராஜசெல்வி வரவேற்று பேசினார். முடிவில் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.

Next Story