திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரி விழா


திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
x
தினத்தந்தி 2 March 2022 8:23 PM IST (Updated: 2 March 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நாட்டியாஞ்சலி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நாட்டியாஞ்சலி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாட்டியாஞ்சலி 
சிவராத்திரிக்கு பல பெருமைகள் இருந்தாலும் அன்றைய நாளில் விரதம் இருப்பது மிகவும் சிறப்புக்குரியது. சிவராத்திரி விழாவையொட்டி நேற்று திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 4 கால சிறப்பு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து  வன்மீகநாதர், மரகதலிங்கம், அசலேஸ்வரர் உள்பட அனைத்து சிவலிங்கத்திற்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் நாட்டியாஞ்சலி  நடந்தது.
சிறப்பு அலங்காரம்
இதேபோல் திருவாரூர் கமலாலயம் குளத்தின் நடுவில் அமைந்துள்ள நாகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. திருவாரூர் வாசன் நகரில் உள்ள ஜோதி லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. புதுத்தெருவில் உள்ள கருணாகரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து திருக்காரவாசல் தியாகராஜர் கோவில் குளத்தில் பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சிவன் கோவிலிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
மன்னார்குடி
மன்னார்குடியில் உள்ள அண்ணாமலைநாதர் கோவில், காமாட்சி அம்மன்கோவில், கீழராஜவீதி நீலகண்டேஸ்வரர் கோவில், புதுப்பாலம் கைலாசநாதர் கோவில், மீனாட்சி அம்மன் கோவில், திருப்பாற்கடல் காசி விஸ்வநாதர் கோவில், ஜெயங்கொண்ட நாதர் கோவில், பாமணி நாகநாதர் கோவில், சூட்டுக்கோல் ராமலிங்க சாமி ஜீவசமாதி கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Next Story