சிவாலயங்களில் மகாசிவராத்திரி சிறப்பு வழிபாடு


சிவாலயங்களில் மகாசிவராத்திரி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 March 2022 8:46 PM IST (Updated: 2 March 2022 8:46 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் சிவாலயங்களில் மகா சிவராத்திரையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீடாமங்கலம், மார்ச்.3-
திருவாரூர் மாவட்டத்தில் சிவாலயங்களில் மகா சிவராத்திரையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
நீடாமங்கலம் 
நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதனையொட்டி ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் மகாசிவராத்திரியையொட்டி  நான்கு கால பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இசைநிகழ்ச்சிகள் நடந்தது. நீடாமங்கலம் வட்டம் பூவனூர் கற்பகவல்லி, சதுரங்க வல்லபநாதர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில், பூவனூர் அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளிட்ட ேகாவில்களில் மகா சிவராத்திரிவிழா நடைபெற்றது. 
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
குடவாசல்
குடவாசல் அருகே உள்ள திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. விழாவையொட்டி 3-ம் கால சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சாமிக்கு 108 லிட்டர் பால், பன்னீர், தேன், திரவியம், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் ஆன்மீகமும், மனிதனும் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு நடந்தது.  
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவியரசு, தக்கார் சீனிவாசன், மேலாளர் வள்ளி கந்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நான்கு கால பூஜை நடந்தது. விழாவில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதற்கான  ஏற்பாடுகளை கோவில் மேலாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.
வல்லம் அங்காள பரமேஸ்வரி, கடமங்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குடவாசல் சதுரகிரிநாதர் சத்ரு சம்கார மூர்த்தி கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதில் சதுரகிரிநாதர் மகாநந்தி பகவானுக்கு முதல் கால சிறப்பு பூஜை நடந்தது. அதனை  தொடர்ந்து சாமிக்கு பால், பன்னீர், தேன், திரவியம், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி  நாட்டியாஞ்சலி  நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை  சத்ரு சம்கார மூர்த்தி கோவில் நிர்வாகிகள் தனபாலன், வக்கீல் சிவசங்கரன் ஆகியோர் செய்திருந்தனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் உள்ள சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், மகா யாகமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நாட்டியாஞ்சலி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜா, கணக்கர் சீனிவாசன், குழந்தைகள் நல டாக்டர் ராஜா, பாரதமாதா நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் மற்றும் பலர் செய்து இருந்தனர். 
இதேபோல ஆதிரங்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
--- 


Next Story