நாகை- வேதாரண்யம் நகரசபை உறுப்பினர்கள் பதவி ஏற்பு
நாகை-வேதாரண்யம் நகரசபை உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
நாகப்பட்டினம்:-
நாகை-வேதாரண்யம் நகரசபை உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் ஆகிய 2 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர்களை (கவுன்சிலர்கள்) தேர்வு செய்வதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடந்தது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மாதம் 22-ந் தேதி நடந்தது. அன்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேற்று நகரசபை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர். நகரசபை உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் நடந்தது.
நாகை நகராட்சி
நாகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 28 பேரும், அ.தி.மு.க.வை சேர்ந்த 5 பேரும், சுயேச்சையாக போட்டியிட்ட 3 பேரும் வெற்றி பெற்றனர். தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று நாகை நகராட்சியை கைப்பற்றி உள்ளது.
நாகை நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நகரசபை உறுப்பினர்களாக பதவியேற்கும் விழா நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆணையருமான ஸ்ரீதேவி நகரசபை உறுப்பினர்கள் 36 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், நகராட்சி பொறியாளர் ஜெயகிருஷ்ணன், தேர்தல் உதவி உதவியாளர் ஞானவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் முத்துசெல்வம் நன்றி கூறினார்.
வேதாரண்யம்
வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 18 இடங்களையும், காங்கிரஸ் 1 இடத்தையும், அ.தி.மு.க. 1 இடத்தையும் கைப்பற்றியது. சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்தில் வெற்றி பெற்றார். இவர்கள் 21 பேருக்கும் நகராட்சி ஆணையர் ஹேமலதா நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Related Tags :
Next Story