ஆதித்தமிழர் கட்சி சார்பில் மலையில் குடியேறும் போராட்டம்
சூளகிரியில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் மலையில் குடியேறும் போராட்டம் நடந்தது.
சூளகிரி:
சூளகிரி கீழ்த்தெரு மற்றும் காமநாயக்கன்பேட்டை அருந்ததியர் மக்களுக்கு கிருஷ்ணேபாளையத்தில் 4½ ஏக்கர் பரப்பளவில் மயானம் உள்ளது. இந்த மயானத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், தீண்டாமை சுவர் எழுப்பு பாதையை அடைத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆக்கிரமிப்பு, தீண்டாமை சுவரை அகற்றக்கோரி ஆதித்தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நேற்று சூளகிரி மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் நிறுவன தலைவர் ஜக்கையன் தலைமை தாங்கினார். போராட்டம் குறித்து தகவல் அறிந்த சூளகிரி தாசில்தார் நீலமேகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று கட்சியினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மலையேறும் போராட்டம் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story