வடகாடு பகுதியில் பலாப்பழம் விற்பனை அமோகம்
பலாப்பழம் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
வடகாடு:
வடகாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலா மரங்களை பராமரித்து வருகின்றனர். மேலும் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் பலாப்பழ விற்பனை அமோகமாக இருக்கும். இங்கு விளையும் பலாப்பழங்கள் மிகவும் சுவையாக இருப்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கி செல்வார்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா வைரஸ் பரவலால் பலாப்பழங்களை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விற்பனை சரிவை தொடர்ந்து பலா மரத்திலேயே பழுத்து வீணாகி வந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் பெருமளவு குறைந்து வருவதால் பலாப்பழம் விற்பனை அமோகமாக உள்ளது.
Related Tags :
Next Story