திருக்கடையூரில் மயான சூறை நிகழ்ச்சி
மாசி சிவராத்திரியையொட்டி திருக்கடையூரில் மயான சூறை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கடையூர்:
மாசி சிவராத்திரியையொட்டி திருக்கடையூரில் மயான சூறை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அங்காள பரமேஸ்வரி கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் கீழவீதியில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத சிவராத்திரியையொட்டி மயான சூறை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று மயான சூறை நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி. நான்கு கால அபிஷேக ஆராதனையும் நேற்று கரகம் புறப்பாடும் நடந்தது.
அப்போது பக்தர்கள் காளி வேடம் அணிந்து அமிர்தகடேஸ்வரர் கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது.
மயான சூறை நிகழ்ச்சி
இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு மயான சூறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறையாறு போலீசார் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் கிராம மக்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story