புதுக்கோட்டை மாவட்டத்தின் பழமையான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆய்வு


புதுக்கோட்டை மாவட்டத்தின் பழமையான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 3 March 2022 12:07 AM IST (Updated: 3 March 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தின் பழமையான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுவது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை:
பழமையான ஆவணங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1801 முதல் 1946-ம் வருடம் வரையிலான தர்பார் ஆவணங்களும், பழைய திவான் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த முக்கிய ஆவணங்களும் புதுக்கோட்டை மாவட்டம் தொடர்பான அரசிதழ்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் அனைத்தும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவண காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 
இதனை டிஜிட்டல் மயமாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரியும், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனரும், அலுவலால் அரசுத்துணைச் செயலாளரும், தமிழ் இணைய கல்வி கழக இயக்குனருமான வீ.ப.ஜெயசீலன் நேற்று புதுக்கோட்டையில் மாவட்ட கலெக்டர் கவிதாராமுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆவணங்களை பார்வையிட்டார்.
டாக்டர் முத்துெலட்சுமி ரெட்டிக்கு சிலை
அதனைத் தொடர்ந்து சட்டசபையில் 110-விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையாருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் சிலை அமைக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அம்மையாரின் சிலை அமைக்கப்படும் இடம் மற்றும் பணி முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, இணை இயக்குனர் (தகவல் தொழில்நுட்பத் துறை) கோமகன், உதவி இயக்குனர் (தகவல் தொழில்நுட்பத் துறை) காமாட்சி, வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கருணாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story