அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 March 2022 12:10 AM IST (Updated: 3 March 2022 12:10 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் திருவண்ணாமலை கோட்டம் சார்பில் திருவண்ணாமலை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் விடுப்பெடுத்தால் கம்பென்டு டியூட்டி தான் பார்த்திட வேண்டும் என்று இலாகாவால் வௌியிடப்பட்ட ஆணையை திரும்ப பெற வேண்டும். 

காலிப் பணியிடங்கள் நிரப்புவதில் நிர்வாகத்தால் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால் பணியிட மாற்றம் கேட்டும் விண்ணப்பித்த கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு காலிப்பணியி டங்கள் ஏற்கனவே அறிவிப்பு ஆகிவிட்டது என மறுக்கப்பட்ட விண்ணப்பங்களை மறு பரிசீலனை செய்து உடனடியாக பணியிடமாற்றம் வழங்க வேண்டும். 

சீனியர் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு வெயிட்டேஜ் 12, 24, 36 உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story