வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 3 March 2022 12:11 AM IST (Updated: 3 March 2022 12:11 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சியில் அருணை நகர் இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 45 ஆயிரத்தில் சாலை அமைக்கும் பணிகளும், தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சத்து 57 ஆயிரத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஆடையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் உறிஞ்சிக்குட்டை அமைக்கும் பணியினையும், மேலதிக்கான் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற நூலக கட்டிடம் மறு சீரமைப்பு பணியினையும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தனிநபர் உறிஞ்சிக்குழி அமைக்கும் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் உடையானந்தல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு மரக்கன்றினை நட்டு வைத்தார். 

தொடர்ந்து திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

ஆய்வின் போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் (திருவண்ணாமலை) வெற்றிவேல், உதவி செயற் பொறியாளர் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தராஜ், லட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story