மாநில அளவிலான சிலம்ப போட்டி மழையூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை


மாநில அளவிலான சிலம்ப போட்டி மழையூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 3 March 2022 12:18 AM IST (Updated: 3 March 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

மாநில அளவிலான சிலம்ப போட்டியில் மழையூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

கறம்பக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாநில அளவில் நடைபெற்ற 40-ம் ஆண்டு ஜூனியர் சிலம்ப போட்டியில் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிலம்பம் விளையாடினர். இதில் 11-ம் வகுப்பு படிக்கும் அருண்ராஜ் என்ற மாணவர் முதலிடம் (34 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில்) பெற்றார். இதேபோல் 65 கிலோ எடைபிரிவில் 12-ம் வகுப்பு மாணவர் கோகுல்சந்தோஷ் 2-ம் பரிசு பெற்றார். மாநில அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அரங்கசாமி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story