வேலூரில் மாரத்தான் போட்டி


வேலூரில் மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 3 March 2022 12:21 AM IST (Updated: 3 March 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வேலூரில் மாரத்தான் போட்டியை டி.ஐ.ஜி. ஆனி விஜயா தொடங்கி வைத்தார்.

வேலூர்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி வேலூரில் நடந்தது. வேலூர் சி.எஸ்.ஐ. பிஷப் சர்மா நித்தியானந்தம் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா கலந்துகொண்டு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

ஊரீசு கல்லூரியில் தொடங்கிய மாரத்தான் போட்டி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது. 

இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. 

Next Story