பொதுமக்கள் கொண்டு வரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்டி.ஐ.ஜி. ஆனிவிஜயா அறிவுறுத்தல்


பொதுமக்கள் கொண்டு வரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்டி.ஐ.ஜி. ஆனிவிஜயா அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 3 March 2022 12:25 AM IST (Updated: 3 March 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு டி.ஐ.ஜி.ஆனிவிஜயா அறிவுறுத்தினார்.

வாணியம்பாடி

பொதுமக்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு டி.ஐ.ஜி.ஆனிவிஜயா அறிவுறுத்தினார்.

வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையம், தாலுகா போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்துப் போலீஸ் நிலையம், போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றில் நடந்து வரும் பணிகள் குறித்தும், போலீசாரின் குறைகள் குறித்தும் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனவிஜயா நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வின்போது வாணியம்பாடி நகரில் போக்குவரத்தை சீர் செய்ய அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், போலீசார் அனைவரும் சீருடையுடன் பணியில் இருக்க வேண்டும், பொதுமக்கள் கொண்டு வரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை அலை கழிக்க வைக்கக்கூடாது, காவல்துறை மக்களின் நண்பர் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். சாராயம், போலி மதுபானம் விற்பனையை ஒழிக்க வேண்டும், எனக் கூறினாா்.

ஆய்வின்போது வாணியம்பாடி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பழனிமுத்து, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.
---
Image1 File Name : 9280211.jpg
----
Reporter : V. ARULRAJAN  Location : Vellore - VANIYAMBADI

Next Story