திமுக பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
ஆற்காட்டில் தி.மு.க.பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆற்காடு
ஆற்காட்டில் தி.மு.க.பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
தொழில் அதிபர்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாசா பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏ.வி.சாரதி. தொழிலதிபர்.
அ.தி.மு.க.வில் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆற்காடு தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார்.
ஆனால் அந்த தொகுதி, கூட்டணிக் கட்சியான பா.ம.க.கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து அவர் விலகி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
கட்சியில் தீவிரமாக பணியாற்றி வரும் ஏ.வி.சாரதி, நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய முழுமுனைப்போடு செயல்பட்டார்.
வருமான வரித்துறையினர்
ஏ.வி.சாரதி சிமெண்டு ஏஜென்டாகவும் உள்ளார். மேலும் இவருக்கு ஆற்காடு அடுத்த ஆனை மல்லூர் பகுதியிலுள்ள கல்குவாரி உள்ளது. இந்த நிலையில் இவரது வீட்டில் சோதனையிட வருமான வரித் துறையினர் 10-க்கும் மேற்பட்டோர் சென்னையிலிருந்து நேற்று அதிகாலை திடீரென வந்தனர்.
அவர்கள் கல்குவாரி மற்றும் ஆற்காட்டில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் நேற்று காலை 6.30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆவணங்கள் குறித்து சரி பார்த்து வருகின்றனர். இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story