கத்தியை காட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது


கத்தியை காட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 3 March 2022 12:28 AM IST (Updated: 3 March 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

கத்தியை காட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கரூர், 
கடவூர் அருகே உள்ள இழுவாக்கரியூரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 42), பிளம்பர். இவர் நேற்று முன்தினம் கரூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பொன்னுச்சாமி வைத்திருந்த ரூ.400-ஐ பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து பொன்னுச்சாமி கொடுத்த புகாரின் பேரில் கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி பணம் பறித்த  குளித்தலை பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (26), திருமாநிலையூரை சேர்ந்த சபரி என்கிற பால்பாண்டியன் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

Next Story